முக்கிய செய்திகள்:
ஷீலா தீட்சித்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளராக விஜேந்தர் குப்தா போட்டியிட்டார்.

அப்போது, நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ஷீலா தீட்சித் மற்றும் அவரது தலைமையிலான டெல்லி அரசின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை விஜேந்தர் குப்தா அடுக்கடுக்காக அள்ளி வீசினார்.

இதனையடுத்து, டெல்லி கோர்ட்டில் விஜேந்தர் குப்தா மீது ஷீலா தீட்சித் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து ஆஜராக தவறிய ஷீலா தீட்சித்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து டெல்லி கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்