முக்கிய செய்திகள்:
பீகாரில் கொள்ளையர் அட்டூழியம்: ரெயிலில் பயணி சுட்டு கொலை–கொள்ளை

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் கோதர்த்பூர்– கதியா மயூர்யா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுக் கொண்டிருந்தது. ராம்பூர் தும்புரா ரெயில் நிலையம் அருகே நள்ளிரவில் சென்ற போது ஆயுதம் தாங்கிய 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அந்த ரெயிலில் ஏறியது.

அவர்கள் ரெயிலில் தூங்கி கொண்டிருந்த ஒரு பயணியை துப்பாக்கியால் சுட்டு அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர். இதில் அந்த பயணி குண்டு பாய்ந்து பலியானார்.

பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்த பயணிகளை துப்பாக்கியால் சுட்டு மிரட்டியவாறு ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் 4 பயணிகள் குண்டு காயம் அடைந்தனர்.

உடனே பயணிகள் ரெயிலை நிறுத்தி அதிகாரியிடம் புகார் செய்தனர். காயம் அடைந்த 4 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொள்ளை கும்பலை ரெயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்