முக்கிய செய்திகள்:
பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் இனக்கலவரங்கள் அதிகரித்தது ஏன்? : சோனியா

மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இனக்கலவரம் கடுமையாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:-

பா.ஜனதா கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு கடந்த 11 மாதங்களாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இனக்கலவரம் அதிகரித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இதுபோன்ற சம்பவங்கள் அரிதாகத்தான் நடந்தன.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் இனக்கலவரங்கள் திடீரென அதிகரித்தது ஏன்? மதத்தின் அடிப்படையில் நமது சமூகத்தை பிரிப்பதற்காக வேண்டுமென்றே இதுபோன்ற கலவரங்களை உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜனதாவின் இனவாத அரசியலை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்