முக்கிய செய்திகள்:
மாநிலங்களவைக்கு வந்தார் நடிகை ரேகா

சச்சின் தெண்டுல்கர் மற்றும் பாலிவுட் நடிகை ரேகா ஆகியோர் 2012-ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி. ஆக பதவியேற்றனர். எம்.பி.யான பிறகு அவர்கள் பெரும்பாலும் நாடாளுமன்றம் வருவதில்லை. இந்நிலையில் அவர்களது வருகை குறித்து மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ராஜீவ் கேள்வி எழுப்பியிருந்தார்.

சச்சின், ரேகா ஆகியோர் நீண்ட நாட்களாக சபைக்கு வரவில்லை. அவர்கள் இருவரும் ஏதாவது அனுமதி பெற்றிருக்கிறார்களா? என்பதை தெரிய விரும்புகிறேன் என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் சில உறுப்பினர்களும் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். பலத்த சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து டெண்டுல்கர் தான் மாநிலங்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கமளித்தார்.

தனது சகோதரருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் தன்னால் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் தனக்கு விடுப்பு அளிக்குமாறும் அவர் அவைத்தலைவருக்கு கடிதம் எழுதினார்.

கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி மாநிலங்களவைக்கு வந்த நடிகை ரேகா, தனது வருகை குறித்து சர்ச்சை எழுந்தததை தொடர்ந்து இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்றைய வருகையுடன் சேர்த்து இதவரை 8 நாட்கள் மட்டுமே அவர் அவைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்