முக்கிய செய்திகள்:
பிரதமர் மோடிக்கு ராக்கி :குஜராத் முதல் மந்திரி ஆனந்திபென் அணிவித்து மகிழ்ந்தார்

குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பு வகித்து வந்த நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு காலியாக இருந்த அம்மாநில முதல் மந்திரி பதவிக்கு மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த மந்திரிகளில் ஒருவரான ஆனந்திபென் பட்டேல் நியமிக்கப்பட்டார்.

சகோதரத்துவத்தை வலியுறுத்தி கொண்டாடப்படும் ராக்கி திருநாளையொட்டி, நேற்று புது டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த குஜராத் முதல் மந்திரி ஆனந்தி பென் பட்டேல் அவரது கையில் ‘ராக்கி கயிறு’ அணிவித்து மகிழ்ந்தார்.

இந்த சந்திப்புக்கு இடையில் மத்திய மந்திரிகள் சிலரையும் சந்தித்த அவர் குஜராத் மாநில வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி, கிடப்பில் இருக்கும் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றித் தரும்படி வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்