முக்கிய செய்திகள்:
காமன்வெல்த்தில் பதக்கம் வென்றவர்களுக்கு : பரிசளிப்பு விழா

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர் - வீராங்கனைகளுக்கு மத்திய அரசின் சார்பில் இன்று நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கேடயங்களும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.

23-7-2014 முதல் 3-8-2014 வரை கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 15 தங்கம், 30 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் என 64 பதக்கங்களை இந்தியா வென்றது. இந்த பதக்கங்களை நாட்டுக்கு பெற்றுத் தந்த வீரர்- வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தின் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மத்திய விளையாட்டு துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்தியாவின் சார்பில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற 213 வீரர்- வீராங்கனைகளும் வந்திருந்த இந்த விழாவில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய், வெண்கலப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா 6 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பரிசுத்தொகையாக வழங்கிய மந்திரி சர்பானந்தா சோனோவால், நாட்டுக்கு பெருமையை தேடித்தந்த வீரர்- வீராங்கனைகளின் ஊக்கத்தை பாராட்டிப் பேசினார்.

மேலும் செய்திகள்