முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் கட்சியில் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை: பிரியங்கா

பிரியங்கா காந்தி விரைவில் அரசியலில் நுழைய இருப்பதாக உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியினர் பேனர் வைத்தனர். அவர் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாக கட்சி நிர்வாகிகளும் பேசி வந்தனர். எனவே, பிரியங்கா விரைவில் கட்சியில் முக்கிய பொறுப்பை ஏற்பார் என்றும், முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்றும் செய்திகள் வெளியாகத் தொடங்கின.

இதனை திட்டவட்டமாக மறுத்த பிரியங்கா, காங்கிரஸ் கட்சியில் பொறுப்பை ஏற்க உள்ளதாக வரும் தகவல்கள் யூகங்கள் என்றும் ஆதாரமற்ற வதந்திகள் என்றும் குறிப்பிட்டார். மேலும் இதுபோன்ற வதந்திகளுக்கு ஊக்கம் அளிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தால், அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

பிரியங்காவின் சகோதரரான ராகுல் காந்தி (44), மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரத்தை தலைமை தாங்கி நடத்தினார். ஆனால், தேர்தலில் காங்கிரஸ் இதுவரை இல்லாத வகையில் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இளம் தலைமுறையினரை ஊக்கம் அளித்து கட்சியை வளர்க்கும் வகையில் பிரியங்காவை தொண்டர்கள் வரவேற்கின்றனர்.

மேலும் செய்திகள்