முக்கிய செய்திகள்:
பெங்களூர் பள்ளி தாளாளர் கைது

பெங்களூர் விப்ஜியார் உயர்நிலைப்பள்ளியில் 6 வயது மாணவி ஸ்கேட்டிங் பயிற்சியாளரால் கற்பழிக்கப்பட்டாள். பெற்றோர் மற்றும் பொதுமக்களின் நீண்ட போராட்டத்துக்கு பிறகு பயிற்சியாளர் முஸ்தபா கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தில் போலீசார் மிகவும் காலதாமதமாக நடவடிக்கை எடுத்ததாலும், பெங்களூரில் தொடர்ந்து கற்பழிப்பு சம்பவங்கள் நடந்ததாலும் பெங்களூர் போலீஸ் கமிஷனர்ராக வேந்திரா இடமாற்றம் செய்யப்பட்டார்.

போலீசும், அரசும் தாமதமாக நடவடிக்கை எடுத்ததாலும் பள்ளி நிர்வாகத்தின் மீது பெற்றோரும், சமூக ஆர்வலர்களும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்கள். பயிற்சியாளர் முஸ்தபா 2011–ம் ஆண்டு முதல் இங்கு பணியாற்றி வருகிறார். அதற்கு முன் அவர் வேறொரு பள்ளியில் பணியாற்றியபோதும் இதுபோல் மாணவிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர் என தெரிய வந்தது.இதனால் அவரை அந்த பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. ஆனால் அவரை பற்றி சரியாக விசாரிக்காமல் விப்ஜியார் பள்ளி நிர்வாகம் பணியில் சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. எனவே பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பள்ளி தாளாளர் ருஸ்தம் கெரவாலா இன்று காலை கைது செய்யப்பட்டார். அவர் மீது பள்ளியில் நடந்த குற்ற சம்பவம் பற்றி தாமதமாக போலீசில் புகார் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் இவரது அறையைத் தான் பெற்றோர் முற்றுகையிட்டு கதவுகளை அடித்து நொறுக்கினர்.கைதான முஸ்தபாவிடம் இருந்து லேப்–டாப், செல்போன் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கற்பழிப்பில் பள்ளியின் மற்ற ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்