முக்கிய செய்திகள்:
இலங்கை கடற்படையால் 3 ஆண்டுகளில் 1,405 மீனவர்கள் சிறைபிடிப்பு: சுஷ்மா தகவல்

கடந்த மூன்று ஆண்டுகளில். மொத்தம் 1,405 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.மாநிலங்களவையில் இந்தத் தகவலை வெளியிட்ட வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 12 வரை 532 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும், 4 மீனவர்களும், 47 படகுகளும் இலங்கை சிறையில் இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு மத்திய அரசு மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றது என்று இது தொடர்பான நடவடிக்கைகளையும், பேச்சுவார்த்தைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்