முக்கிய செய்திகள்:
காஷ்மீர் எல்லையில் பதட்டம்

காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை முகாம் மீது இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது.

உடனே இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் இந்திய தரப்பில் 4 ராணுவ வீரர்கள் குண்டு காயம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை. பாகிஸ்தானின் அத்துமீறலால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்