முக்கிய செய்திகள்:
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தீவிரவாத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று கூறினார்.

பிரிக்ஸ் என்னும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் உச்சிமாநாடு, பிரேசில் நாட்டில் நேற்று தொடங்கியது. மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது, இதற்காக மனித இனம் ஒன்றுபட்டு தீவிரவாதத்தை தனிமைப் படுத்த வேண்டும். மேற்கு ஆசியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல், பிராந்திய பிரச்னைகள் தலை தூக்கியிருப்பதால் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் நிலவிரும் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பிரிக்ஸ் நாடுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். என்று கூறினார்.

மேலும், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவிவரும் பிரச்னையை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கிடையேயான முரண்பாடுகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவு தரவதாக கூறினார். பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்து வரும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்