முக்கிய செய்திகள்:
ரயில்வே பட்ஜெட் ; சென்னை- ஐதராபாத் இடையே புதிய சூப்பர் பாஸ்ட் ரயில்

புதுடில்லி: பல்வேறு எதிர்பார்ப்புகள் மத்தியில் 2014- 15க்கான ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் மும்பை - ஆமதாபாத் இடையே புல்லட்ரயில் விடப்படும் என்றும், ரயில்வே நிலையங்களில் சுகாதாரத்திற்கு முக்கியத்தும் வழங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார், சென்னை- ஐதராபாத், அதிவேக ரயில் இயக்கப்படும். ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில் கட்டண உயர்வு எதுவும் இருக்காது என்று அமைச்சர் உறுதி அளித்தார். . இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்ற பின்னர் தாக்கலாகும் முதல் படஜெட் என்பதால் இவரது அரசு என்ன செய்ய போகிறது என்ற பரவலான எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

ரயில்வேயில் தனியார் மயம், ரயில்வேயில் அன்னிய நேரடி முதலீடு, புது தொழில்நுட்ப வசதிகள், இணையத்தில் டிக்கெட் பதவில் கூடுதல் வசதிகள், காகிதம் இல்லாத நிர்வாகம் என்பதால் இது தொடர்பான கம்ப்யூட்டர் மயம் பலப்படுத்துதல், பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம், விபத்துக்களை தவிர்க்க முன்னேற்பாடு வசதிகள், இதற்கென உயர் தொழில்நுட்ப எக்ஸ்ரே கருவி பொருத்துதல், ரகசியகாமிரா அதிகரிப்பு, ரயில்வே பாதுகாப்பு படை பலப்படுத்துதல், ரயில்வே ஊழியர்களுக்கு ஊதியம் தொடர்பான விஷயங்கள், புதிய ரயில் திட்டங்கள், புதியரயில்பாதை, புனித தலங்களுக்கு சிறப்பு ரயில், புதிய அதிவேக நவீனரயில்கள் அறிமுகம், என புது, புது அறிவிப்புக்கள் வெளியாகலாம் என தெரிகிறது.


காலை 11 மணியளவில் பார்லி., துவங்கியதும் சில விவாதங்களுக்கு பின்னர் 12 மணியளவில் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

மேலும் செய்திகள்