முக்கிய செய்திகள்:
வரதட்சணை வழக்கில் நீதிமன்ற புதிய உத்தரவு

பெண்களில் பெரும்பாலானோர் வரதட்சணைக்கு எதிரான சட்டத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இனி இம்மாதிரியான புகாரின் பேரில் நீதிபதிகளின் உத்தரவில்லாமல் யாரையும் கைது செய்யக்கூடாதென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக கணவரையும், கணவரது உறவினர்களையும் கைது செய்ய வைப்பதற்காக வரதட்சணைக்கு எதிரான இந்திய தண்டனை சட்டம் 498ஏ.வை பெண்கள் பயன்படுத்தி வருவது மிகவும் அதிகமாகிவிட்டது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு பின் ஏராளமானோர் விடுதலை ஆகி வருவது பெண்களின் கூற்று பொய்யனாது என்பதை நிரூபித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 498ஏ.வின் படி எவரையும் காவல்துறை கைது செய்யக்கூடாது என அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 

மேலும் செய்திகள்