முக்கிய செய்திகள்:
ஹமீது அன்சாரி சீனா பயணம்

இந்தியாவும் சீனாவும் இணைந்து கடந்த 1954ஆம் ஆண்டு பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கியதன் 60ஆவது ஆண்டு விழா, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 28-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

மத்தியில் நரேந்திர மோடி அரசு ஆட்சி அமைத்தப் பிறகு இந்திய தலைவர் சீனா செல்வது இதுவே முதல் முறையாடும். ஹமீது அன்சாரி சீனா செல்வது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமல்லாது, 1994-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஒருவர் சீனா செல்கிறார்.

இந்தியா - சீனா நாடுகள் தொடர்ந்து பல்வேறு உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சீனா செல்லும் ஹமீது அன்சாரி அந்நாட்டு துணை அதிபர் லி யுவான்சோ-வை முதலில் சந்திக்கிறார். இரு நாட்டு நல்லுறவு குறித்து லியுடன் விரிவாக ஆலோசிக்கவுள்ளார் என வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

30-ம் தேதியன்று சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன பிரதமர் லி கேகியாங் ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து அன்சாரி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, சீனா - இந்தியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்