முக்கிய செய்திகள்:
சுஷ்மா வங்கதேசம் செல்கிறார்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வ ராஜ் வரும் 25-ம் தேதி வங்க தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற் கொள்ளவுள்ளார்.

அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, சுஷ்மா தனியாக மேற் கொள்ளும் வெளிநாட்டுப் பய ணம் இதுவாகும். இதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி யுடன் பூட்டான் நாட்டுக்குச் சென்று வந்தார். சுஷ்மா ஸ்வரா ஜின் பயணம் குறித்து வெளி யுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜூன் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை வங்கதேசத்தில் சுஷ்மா ஸ்வராஜ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணம் வங்கதேசத்துடனான இந்தியாவின் நட்புறவை வலுப்படுத்துவதாக அமையும். வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ.எச்.மெஹ்மூத் அலியு டன் இருநாட்டு நட்புறவை மேம் படுத்துவது குறித்து சுஷ்மா பேச வுள்ளார். அந்நாட்டின் அதிபர் அப் துல் ஹமீது, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். அந்நாட்டு வர்த்தக, கலாச்சார அமைப்பினருடன் கலந்து ரையாட உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்ற போது, வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதிய மெஹ்மூத் அலி, வங்கதேசம் வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்