முக்கிய செய்திகள்:
தமிழக முதல்வருக்கு உம்மன் சாண்டி கடிதம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி எழுதியுள்ள கடிதத்தில், "கேரளாவில் பருவமழை தாமதமானது, மத்திய மின்சார ஒதுக்கீட்டில் தட்டுப்பாடு, மின்நிலையங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது போன்ற காரணங்களால் கடுமையான மின் பற்றாக்குறை நிலவுகிறது.

பற்றாக்குறை சரியாகும் வரை தனியார் மின்நிலையங்களில் இருந்து மின்சாரத்தை வாங்க முடிவுசெய்துள்ளோம். ஆனால், அதுவும் போதுமானதாக இல்லாததால், தற்போது கேரளாவில் மின்சார ஒழுங்குமுறையால் மின்வெட்டை அமல்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தமிழ்நாட்டில் இருந்து மின்சாரத்தை வாங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே, தமிழகத்தில் உற்பத்தியாகும் கூடுதல் மின்சாரத்தை கேரளாவுக்கு வழங்க வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்