முக்கிய செய்திகள்:
தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகரராவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ்

தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் குறித்து தரக்குறைவாக பேசியது தொடர்பாக, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவிற்கு அனந்தபூர் நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நடிகர் பவன் கல்யாணை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தரக்குறைவாக விமர்சித்ததாக, முரளி கிருஷ்ணா எனும் வழக்கறிஞர் அனந்தபூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து 2-வது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யும்படி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் வரும் 30-ம் தேதி அனந்தபூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் செய்திகள்