முக்கிய செய்திகள்:
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் அழைப்பு

உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. இறுதிப் போட்டி வரும் ஜூலை 13-ஆம் தேதி ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது.இறுதிப் போட்டியைக் காணவருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேசில் அதிபர் தில்மா ரவுசஃப் அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும் பிரேசில் செல்வது தொடர்பாக பிரதமர் மோடி இறுதி முடிவு எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

பிரிக்ஸ்’ உச்சி மாநாடு ஜூலை 15 17 தேதிகளில் பிரேசிலில் உள்ள ஃபோர்டலிசா நகரில் நடைபெற உள்ளது. ‘பிரிக்ஸ்’ உறுப்பு நாடுகளான இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் கால்பந்து போட்டியைக் காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுதவிர, ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி மூன், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு உலகக் கோப்பை போட்டியைக் காண வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நினைவாக கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு தபால் தலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்