முக்கிய செய்திகள்:
ஆந்திர மாநிலத்தில் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் : சந்திரபாபு நாயுடு

புதிய ஆந்திர மாநிலத்தில் உள்ள இரண்டு நகரங்களில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த அதிகாரி கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது.

விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய 2 நகரங்களில் புதிதாக சர்வதேச விமான நிலையமும் ரேணிகுண்டாவில் (திருப்பதி) உள்ள விமான நிலையத்தை விஸ்தரிக்கவும் முடிவு செய்யப் பட்டது.சர்வதேச விமான நிலையம் அமைக்க 9000 அடி நீளம் ஓடுபாதை (ரன் வே) தேவை. இதற்காக 4000 ஏக்கர் நிலம் தேவைப்படும்.

இதற்கான நிலம் கையகப் படுத்தும் பணிகளை உடனடி யாகத் தொடங்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்