முக்கிய செய்திகள்:
நவாஸ் ஷெரீபின் கடிதத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி பதில்

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவுடன் இணக்கமாக செயல்படவும், இரு நாடுகளின் உறவை புதுப்பிக்க விரும்புவதாகவும் கடிதம் எழுதியிருந்தார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள பதில் கடிதத்தில்,

"இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான சூழலில் செயல்படவே நானும் விரும்புகிறேன். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நட்புறவு, அமைதி மற்றும் உடன்பாடுடன் அமைந்தால் தான், நமது இளைய தலைமுறைகளை, பாதுகாப்பான மற்றும் சுமுகமான வழியில் இட்டுச் செல்ல முடியும்.உங்களுடனான சந்திப்பு, இரு நாடுகளின் உறவை மேம்படுத்த முடியும் என்பதை உணர்த்துவதாக இருந்தது. உங்களுடன் இணைந்து செயல்படவே நானும் விரும்புகிறேன். நமது அரசு, சுமுகமாக செயல்பட வன்முறை இல்லா இரு நாட்டு உறவு அவசியமானது.

புது டெல்லிக்கு, நீங்கள் வருகை தந்தது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. உங்களிடமிருந்து பரிசாக வந்த புடவையை பார்த்து, எனது தாய் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார். உங்களின் இந்த செயல், நீங்கள் என் தாய் மீது கொண்டுள்ள மதிப்பினை வெளிப்படுத்துகிறது.கராச்சியில் நடத்தப்பட்டத் தாக்குதல், மிகவும் கண்டனத்திற்குரியது. அப்பாவி மக்களின் உயிரை பறித்துள்ளது காட்டுமிராண்டித்தனமானது. இந்த கடிதம் மூலம், உறவுகளை இழந்து வாடும் மக்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரதமர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

மேலும் செய்திகள்