முக்கிய செய்திகள்:
சீனிவாசன் போட்டியிட தடையில்லை : உச்ச நீதிமன்றம்

சர்வதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சீனிவாசன் போட்டியிட உள்ளார். போட்டியிட அவருக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரி, பிஹார் கிரிக்கெட் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சி.நாகப்பன் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

சூதாட்டப் புகார் தொடர்பான விசாரணை முடியும் வரை பிசிசிஐ தலைவராக செயல்பட தடைவிதிக் கப்பட்டுள்ள அவரை சர்வதேச கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டி யிட அனுமதிக்கக் கூடாது என பிஹார் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

‘கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தெளிவாக உள்ளது. இந்திய கிரிக்கெட் சங்க பொறுப் பில் இருந்து மட்டுமே சீனிவாசன் நீக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக் கெட் சங்கம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அந்த உத்தரவில் எந்த கருத்து வேறு பாடும் இல்லை. எனவே, சீனிவாச னுக்கு தடை விதிக்க முடியாது,’ என்று நீதிபதிகள் அறிவித்தனர்.இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தவர் சீனிவாசன். ஐபிஎல்-2013 போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரின்பேரில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவரை பதவி நீக்கம் செய்தது. அவருக்குப் பதில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுநீல் காவஸ்கர் மற்றும் சிவ்லால் யாதவ் ஆகியோர் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தை கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் மீதான சூதாட்ட புகார் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் தலைமையிலான கமிட்டி விசாரித்து வருகிறது.

 

மேலும் செய்திகள்