முக்கிய செய்திகள்:
கோல்கத்தா மற்றும் நபதிகந்தா பகுதிகளில் எல்இடி விளக்குகள் : மாநில அரசு பரிசிலனை

மேற்கு வங்க மாநிலத்தில் தெரு விளக்குகளை எல்இடி வகையைச் சேர்ந்ததாக மாற்ற அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. மின்சாரத்தை கணிசமாக சிக்கனப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இம்முயற்சியை அம்மாநில அரசு மேற்கொள்ள உள்ளது.

தற்போதுள்ள சோடியம் வேப்பர் விளக்குகளுக்கு பதிலாக எல்இடி விளக்குகளை அமைப்பதால் பெரிய அளவில் மின் சிக்கனம் கிடைக்கும் என ஈஈஎஸ்எல் நிறுவனத்தி்ன் நிர்வாக இயக்குனர் சவுரப் குமார் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக கோல்கத்தா மற்றும் நபதிகந்தா ஆகிய பகுதிகளில் எல்இடி விளக்குகளை அமைக்க மேற்கு வங்க அரசுடன் இம்மாத இறுதியில் ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் எல்இடி தெரு விளக்குகள் இதுவரை அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்