முக்கிய செய்திகள்:
நரேந்திர மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது

பாரதிய ஜனதா தலைமையிலான பாரதிய ஜனதா அரசு எரிவாயு விலையை உயர்த்தக் கூடாது என்று வலியுறுத்தினார்.
பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை நூறு சதவிகிதமாக உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வற்புறுத்திய கெஜ்ரிவால், கருப்புப் பணத்தை மீட்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்திருப்பதை வரவேற்பதாக கூறினார்.


மக்களின் கனவுகளை நரேந்திர மோடி நனவாக்குவார் என்று நம்பிக்கை தெரிவித்த கெஜ்ரிவால், நானும் பிறரைப் போல தவறு செய்யக்கூடிய மனிதன்தான் என்றார். அதனால், தாம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமை கட்சியினருக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்