முக்கிய செய்திகள்:
மோடியைப் பாராட்டியதால் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமைக்கு விளக்க கடிதம்

காங்கிரஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஜய் மக்கானுக்கு, சசி தரூர் எழுதியுள்ள கடிதத்தில், மோடியிடம் உள்ள குறிப்பிட்ட சில விஷயங்களைப் பாராட்டியதன் மூலம், தொடர்ச்சியாக அவரது நடவடிக்கைகள் பற்றிய எதிர்பார்ப்பை மக்களிடையே உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த எதிர்பார்ப்பை அளவுகோலாகக் கொண்டு எதிர்காலத்தில் மோடியின் நடவடிக்கைகளை விமர்சிக்க முடியும் எனக் கூறியுள்ள சசி தரூர், காங்கிரஸ் கட்சியுடன் தனக்குள்ள ஈடுபாடு மற்றும் மதச்சார்பின்மை கொள்கை மீது தமக்குள்ள பிடிப்பு ஆகியவற்றையும் விளக்கியுள்ளார்.

மேலும், தேவையான நேரங்களில் எதிரிகளைப் பாராட்டினால்தான், நம் மீது நம்பகத்தன்மை அதிகரித்து, அவர்களது உண்மை சொரூபம் வெளியாகும் போதும் அவர்களைத் தாக்குவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் சசி தரூர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சசி தரூர் விளக்கக் கடிதம் எழுதியுள்ளதால், இந்தப் பிரச்னை இனி தொடராது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமராக பதவியேற்ற பின்னர் மோடியின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரிய வகையில் இருப்பதாக சசி தரூர் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்