முக்கிய செய்திகள்:
இந்திய பயணத்தில் நவாஸ் ஷெரீப் அதிருப்தி ? பாகிஸ்தான் நாளிதழ் செய்தி

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் இந்திய சுற்றுப்பயணம் மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தானின் டான் நியூஸ் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், பிரதமர் மோடி மற்றும் நவாஸ் இடையிலான சந்திப்புக்குப் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க ஏற்பாடு செய்யாதது அதிருப்தியை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த சந்திப்பு தொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பிலும், நவாஸ் ஷெரீஃப் வருகையின் முக்கியத்துவம் பற்றி விரிவாக குறிப்பிடப்படவில்லை என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி உறுப்பினர்களை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, நவாஸ் ஷெரீஃப் தனியாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தமது வருகையின் முக்கியத்துவம் தொடர்பான அறிக்கையை வாசித்துக் காட்டியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்