முக்கிய செய்திகள்:
நரேந்திர மோடி எம்.பி.யாக பதவியேற்றார்

மக்களவை கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கமல்நாத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.புதிய மக்களவையின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று (புதன் கிழமை) கூடியது. மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தபின், நேற்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் இன்று கூடியது.

மக்களவைக் கூட்டத் தொடர் இன்று காலை துவங்கியதும் புதிதாக மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக பதவியேற்ற எம்.பிக்களுக்கு தாற்காலிக சபாநாயகர் கமல்நாத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.மக்களவை உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி, சோனியா காந்தி உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்