முக்கிய செய்திகள்:
தெலங்கானா முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து

இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலங்கானா இன்று உருவானது. இதன் முதல் முதல்வராக டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் பதவியேற்றார்.தெலங்கானாவின் முதல்வராக பொறுப்பேற்ற சந்திரசேகர ராவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தி:

"இந்தியாவிற்கு புதிய மாநிலம் கிடைத்துள்ளது. நாட்டின் 29-வது மாநிலத்தை நான் வரவேற்கிறேன். தெலங்கானாவின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவி புரியும். பல ஆண்டு கால போராட்டத்திற்கும், பல மக்களின் அர்ப்பணிப்பாலும் இந்த மாநிலம் உதயமாகி உள்ளது.

அந்த மக்களுக்கு நாம் இந்த நேரத்தில் நன்றிகூற கடமைப்பட்டு இருக்கிறோம். எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு தெலங்கானா மாநிலம் பலம் சேர்க்கும்.தெலங்கானாவின் முதல் முதல்வராக பதவியேற்ற சந்திரசேகர ராவுக்கு வாழ்த்துகள்" என்று நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்