முக்கிய செய்திகள்:
உ.பி.யில் வீசிய கடும் புயலுக்கு 14 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் மற்றும் கடும் புயல்காற்று தாக்கியது. இதனால் மின்கம்பங்களும் மரங்களும் சாய்ந்தன. இசாவ்லியா கிராமத்தில் மரம் ஒன்று வேருடன் சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் சகோதரிகளான சோனி (10), ரோகினி (4), மோகினி (2) ஆகியோர் உடல் நசுங்கி இறந்தனர். அவர்களில் தாய் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார்.

ஜான்பூர் மாவட்டத்தில் அதிவேகமாக வீசிய புயலுக்கு 65 வயது முதியவர் உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள். எட்டா மாவட்டத்தில் புயலுக்கு பூலாதேவி (55), வீரேந்திரா (55) மற்றும் 4 பேர் இறந்தனர்.

இதுவரை ஜான்பூர் மாவட்டத்தில் 6 பேரும், எட்டா மாவட்டத்தில் 5 பேரும், பாரபங்கியில் 3 பேரும் இறந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்