முக்கிய செய்திகள்:
வாரணாசியில் பேரணிக்கு அனுமதி அளிக்காத அதிகாரியின் செயல் சரியானதே : தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்

தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாரணாசியில் பேரணிக்கு அனுமதி அளிக்காத அதிகாரியின் செயல் சரியானதே. நடுநிலை குறித்து பல அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. தேர்தல் கமிஷனுக்கு எதிரான கட்சிகளின் போராட்டம் வருத்தமளிக்கிறது.

தேர்தல் ஆணையம் நடுநிலையாகவே செயல்பட்டு வருகிறது. ஒரு தேசிய கட்சி ஆணையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது ஏமாற்றம் அளிக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை விமர்ச்சிக்கும்போது தங்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்