முக்கிய செய்திகள்:
சோனியாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு பிரசாரம் ரத்து

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள மும்பை, நந்துர்பர் மற்றும் துலே ஆகிய மூன்று பகுதிகளில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், சோனியாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரது பிரசார திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சோனியாவுக்கு பதிலாக மும்பை பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நந்துர்பர் மற்றும் துலே பிரசாரக் கூட்டங்களில் மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத், ராஜ் பப்பர் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த மூன்று கூட்டங்களிலும் மகாராஷ்ட்டிர மாநில முதல் மந்திரி பிரித்விராஜ் சவான், காங்கிரஸ் மூத்த தலைவர் மோகன் பிரகாஷ் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்ரே ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் செய்திகள்