Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
காங்கிரஸ் பஸ் யாத்திரை - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் பஸ் யாத்திரை

முன்னாள் அமைச்சர் வட்டி வசந்தகுமார் வீட்டில் சீமாந்திரா பகுதி காங்கிரஸ் கட்சித் தலைவர் ரகுவீரா ரெட்டி தலைமையில் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, முன்னாள் மாநில அமைச்சர்கள் ஆனம் ராம் நாராயண் ரெட்டி, ராமச்சந்திரய்யா, மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பி. சத்ய நாராயணா ஆகியோர் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு சிரஞ்சீவி நிருபர்களிடம் கூறியது.

சீமாந்திரா மாவட்டங்களில் வரும் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பஸ் யாத்திரை மேற்கொள்ள உள்ளோம். ஸ்ரீகாகுளம் முதல் அனந்தபூர் வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் மாநில பிரிவினையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே முடிவு செய்யவில்லை என்பதை பிரசாரம் செய்ய உள்ளோம். மாநிலப் பிரிவினையில் மற்ற கட்சிகள் நாடகமாடுவதை மக்களுக்கு தெரியப்படுத்த உள்ளோம். தினந்தோறும் இரண்டு மாவட்டங்கள் வீதம் கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் பிரசார வியூகம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். இவ்வாறு மத்திய அமைச்சர் சிரஞ்சீவி கூறினார்.

மேலும் செய்திகள்