Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
தனி தெலுங்கானா மசோதா நிராகரிப்பு - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
தனி தெலுங்கானா மசோதா நிராகரிப்பு

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான வரைவு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது.இதை பரிசீலித்த ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி விதிமுறைப்படி ஆந்திர சட்டசபையில் மசோதா அனுமதி பெற வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பினார். இதையடுத்து ஆந்திர சட்டசபையில் மாநில மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி தனி தெலுங்கானா மசோதாவுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார்.ஆந்திர சட்டசபையில் இன்று தனி தெலுங்கானா மசோதாவை நிராகரிக்கும் ஆந்திர முதல்–மந்திரியின் தீர்மானத்தை சபாநாயகர் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் இருந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனி தெலுங்கானா மசோதா நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதோடு சபையை சபாநாயகர் காலவரையின்றி ஒத்தி வைத்தார்.ஆந்திர சட்டசபையில் நிராகரிக்கப்பட்டுள்ளதால் தனி தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இதே நிலையில் தெலுங்கானா மசோதாவை பாராளு மன்றத்தில் நிறைவேற்றினால் நான் அரசியலில் இருந்தே விலக தயாராக இருக்கிறேன் என்று முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் மேலிடத்துக்கு சவால் விடுத்துள்ளார். எனக்கு பதவி முக்கியம் அல்ல. மாநில நலனே முக்கியம். நான் எதற்கும் பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்