முக்கிய செய்திகள்:
கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லியில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி புதிதாக போட்டியிட்டு 28 தொகுதிகளை கைப்பற்றியது. அத்துடன் காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி செய்து வருகிறது.

வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது குறிப்பிட்ட அளவு பணம் செலவு செய்யலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. ஆனால், பெரும்பாலான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேலாக செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டது.பா.ஜனதாவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா என்பவர் கெஜ்ரிவால் தேர்தலில் அதிகமாக செலவு செய்துள்ளார். அதனால் அவரது எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று கோர்ட்டிற்கு வந்தது.

மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி இதுகுறித்து டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்