முக்கிய செய்திகள்:
ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் ஒரு மாத பரோலில் செல்ல அனுமதி - மனைவியின் உடல்நிலையைக் கருதி விடுத்த கோரிக்கை ஏற்பு

மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டுள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மும்பை எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், கடந்த சில வாரங்களுக்கு முன் மருத்துவ சிகிச்சைக்காக 15 நாள் பரோலில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், தனது மனைவி மான்யதா, உடல்நலக் குறைவால் அவதிப்படுவதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க இருப்பதால், தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்கும்படி சஞ்சய் தத் கோரிக்கை விடுத்தார். இதையேற்று, அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகளுக்கு உரிய தகவல் கிடைத்ததும், சஞ்சய் தத் விடுதலையாவார் எனத் தெரிகிறது.

மேலும் செய்திகள்