முக்கிய செய்திகள்:
ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வலியுறுத்தி, டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை முதியோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வலியுறுத்தி, டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை முதியோர்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு நிலவியது.

முதியோர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக 200 ரூபாயை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனை 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியும், ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தியும், பிரதமர் இல்லத்தை நேற்று முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர் அருணா ராய், மாதத்திற்கு 200 ரூபாய் வழங்குவதன் மூலம் எவ்வாறு வாழமுடியும் என கேள்வி எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறிது நேரத்தில் போலீசாரால் அகற்றப்பட்டனர்.

மேலும் செய்திகள்