முக்கிய செய்திகள்:
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம் - 38 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதில், 38 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனினும், 38 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், கூட்டத்தொடரை மேலும் சில நாட்கள் நீட்டிக்க நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து உருவானது. இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.குருதாஸ் தாஸ் குப்தா, விலைவாசி உயர்வு தொடர்பாக தமது கட்சி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார். இக்கூட்டத்தொடரில் காப்பீட்டு மசோதா, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, நேரடி வரி சட்டம், லோக்பால் மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவை பாரதிய ஜனதா கடுமையாக எதிர்க்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மசோதாவுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்