முக்கிய செய்திகள்:
இரண்டு கைகளையும் இழந்த ஒருவருக்கு, உறுப்பு தானத்தின் மூலம் பொறுத்தப்பட்ட புதிய கைகள் : மெக்சிகோவில் மருத்துவர்கள் சாதனை

மெக்சிகோவில் இரண்டு கைகளையும் இழந்த ஒருவருக்கு, உறுப்பு தானத்தின் மூலம் புதிய கைகளை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டை சேர்ந்த கேப்ரில் க்ரானடோஸ் என்பர், கடந்த 2012-ஆம் ஆண்டு மின்சாரம் தாக்கி தனது இரண்டு கைகளையும் இழந்தார். 53 வயதான அவருக்கு உறுப்பு தானத்தின் மூலம் கைகளை பொருத்த மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்கான சந்தர்ப்பத்தையும் அவர்கள் எதிர்நோக்கி இருந்தனர். இந்த நிலையில், தூப்பாக்கி சூட்டில் சிக்கி உயிரிழக்கும் தருவாயில் இருந்த ஒருவர் தனது இரண்டு கைகளையும் கேப்ரிலுக்கு தானம் செய்ய விரும்பினார். இதனைதொடர்ந்து கைகளை மாற்றிபெருத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். இதற்காக 17 மணிநேர அறுவைசிகிச்சையை அவர்கள் மேற்கொண்டனர். ஐந்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட 20 பேர் சிகிச்சையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கேப்ரிலுக்கு வெற்றிகரமாக புதிய கைகள் ​பெருத்தப்பட்டன. கைகளை இயக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரால் 70 சதவீதம் இயல்பான மனிதரைப் போல் செயல்பட முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் அரிய முயற்சியால், புதிதாக கைகளைப் பெற்றுள்ள கேப்ரில், உறுப்பு தான கலாச்சாரம் பெருக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மெக்ஸிகோவைச் சேர்ந்த ஒருவருக்கு, புதிதாக மாற்றுக் கைகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட நிகழ்வு, மருத்துவத் துறைக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.

மேலும் செய்திகள்