முக்கிய செய்திகள்:
அமெரிக்காவில் பனிப்பொழிவுடன் கனமழை - நெடுஞ்சாலைகளில் மூடுபனி சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடக்கம், பொதுமக்கள் பாதிப்பு

அமெரிக்காவில் மிகுந்த பனிப்பொழிவுடன் கனமழையும் பெய்து வருவதால், நாடு முழுவதும் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் மூடுபனி சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், கனமழையும் கொட்டி வருவதால், மிசிகன், கென்னிபங்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் உள்ள முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் பல சென்டி மீட்டர் அளவுக்கு பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. இதனால், அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கடும் பனிப்பொழிவின் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இருந்து புறப்பட வேண்டிய 265க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணம் மேற்கொண்டதால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் ஊர்ந்து சென்ற காட்சி, வான்வெளியில் விண்மீன்கள் ஊர்வலம் சென்றது போல அமைந்தது.

மேலும் செய்திகள்