முக்கிய செய்திகள்:
கராச்சியில் நிகழ்ந்த 2 குண்டு வெடிப்புகளில் 7 பேர் பலி : 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்றிரவு நிகழ்ந்த 2 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கராச்சி நகரில் நேற்றிரவு தேநீர் கடை அருகே வெடிகுண்டுகளை நிரப்பி நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், ரிமோட் கருவி மூலம் வெடிக்கச் செய்யப்பட்டன. இதனால், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் கடும் சேதமடைந்தன. அங்கிருந்த கடைகளின் கண்ணாடிகள் சிதறி விழுந்தன. இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில், ஜியோ நியூஸ் தொலைக்காட்சியின் இணை தயாரிப்பாளர் சாலிக் அலி ஜஃப்ரி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 முதல் 4 கிலோ வெடிபொருட்கள் மோட்டார் சைக்கிள்களுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்றும், இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். சம்பவப் பகுதியில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டதால், அங்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்