முக்கிய செய்திகள்:
விண்கற்களில் தங்கம், பிளாட்டினம் உள்ளனவா? - உலோகங்களை தேடும் முயற்சியில் ஈடுபட நாசா உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள் தீவிரம்

விண்வெளியில், ஏராளமாக காணப்படும் வால் நட்சத்திரம் எனப்படும் விண்கற்களில் தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட உலோகங்களை தேடும் முயற்சியை நாசா உள்ளிட்ட சில வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

மனிதனின் பேராசையால் பூமியில் இயற்கை வளங்கள் வேகமாகக் குறைந்து வருகின்றன. தங்கம், பிளாட்டினம், நிக்கல், தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன. இதே நிலை நீடித்தால் இன்னும் சில நூறு ஆண்டுகளில் இயற்கை வளங்கள் மற்றும் உலோகங்கள் அடியோடு மறைந்து விடும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில், மனிதனின் பார்வை தற்போது விண்வெளியை நோக்கி திரும்பியுள்ளது. அங்கு ஏராளமாக சுற்றி வரும் விண்கற்களில் தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவற்றை எடுப்பதற்கான முயற்சிகளை சில நிறுவனங்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. வரும் 2016-ம் ஆண்டு, அமெரிக்காவின் நாசா நிறுவனம், விண்கற்களில் உள்ள உலோகங்கள் மற்றும் ஆக்சிஜன் - ஹைட்ரஜன் ஆகியவற்றை கண்டறிய தனது செயற்கை கோள்களில் சிறிய வடிவத்திலான உளவுக்கருவிகளை பொருத்தி அனுப்பவுள்ளது. மேலும், பணபலமும், ஆட்பலமும் கொண்ட 3 நிறுவனங்கள் விண்வெளியில் உலோகங்கள் மற்றும் தண்ணீருக்கு தேவையான ஆக்சிஜன் - ஹைட்ரஜனை தேடும் பணியில் ஈடுபடவுள்ளன. இவர்களின் முயற்சி கைகூடினால், தங்கம் மட்டுமின்றி பிளாட்டினம், ரோடியம், இரிடியம், ரினியம், ஓஸ்மியம், ருத்தேனியம், பலடியம், ஜெர்மானியம் போன்ற உலோகங்கள் கணக்கிலடங்காமல் கிடைக்கும் என வான்வெளி ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்