முக்கிய செய்திகள்:
மனித உரிமை மீறல்கள் குறித்து மற்ற நாட்டுத் தலைவர்கள் பேசக்கூடாது - இலங்கை அதிபர் ராஜபக்சே மிரட்டலால் சர்ச்சை

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து பிரதமருக்கு, அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதன் மூலம் அவர்கள் இன்னும் மோசமான நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரன், நேற்று தமிழர்கள் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு சென்றார். அங்கு, அவர் சென்ற காரை தமிழ் மக்கள், ஆவேசத்துடன் வழிமறித்து முற்றுகையிட்டனர். காணாமல் போன தங்கள் உறவினர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்களின் புகைப்படங்களுடன் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் திரு.D.ராஜா, இங்கிலாந்து பிரதமருக்கு, தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை பார்க்கும்போது, அவர்களின் நிலையை புரிந்து கொள்ள முடியும் என்றார்.

இதனிடையே, லண்டனில் உள்ள காமன்வெல்த் செயலகம் முன்பு கூடிய லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள், ரத்தம் தோய்ந்த பதாகைகளை ஏந்தியபடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காமன்வெல்த் அமைப்பை கிரிமினல் குற்றவாளிகள் வழிநடத்திச் செல்லக்கூடாது என்றும் அவர்கள் கோசமிட்டனர். காமன்வெல்த் மாநாட்டில் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து மற்ற நாட்டுத் தலைவர்கள் பேசக்கூடாது என மிரட்டல் விடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து மற்ற நாடுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைபோல் இல்லாமல், இலங்கை மீது வேறொரு கண்ணோட்டம் இருப்பதாக தெரிகிறது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து, இலங்கையை உடனடியாக இன்றே நீக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மேலும் செய்திகள்