முக்கிய செய்திகள்:
ஃபிலிப்பைன்சில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய ஹையன் புயல் - வியட்னாமிலும், தென் சீனாவிலும் பலத்த சேதம்

பிலிப்பைன்ஸில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய ஹையன் புயல் கரையை கடக்கும்போது, வியட்நாமின் ஹைபாங் நகரை முற்றிலுமாக சேதமாக்கியுள்ளது.

ஹையன் புயல் காரணமாக, உயிரிழந்தோரை மீட்கும் பணி பிலிப்பைன்ஸில் நடைபெற்று வரும்நிலையில், வியட்நாமை தாக்கிய இந்தப் புயல், 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது. இதன் காரணமாக ஹைபாங் நகர் பெருத்த சேதத்திற்குள்ளானது. 23 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 200 கப்பல்கள் பாதுகாப்பாக துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதுவரை சேத மதிப்பு வெளியிடப்படவில்லை. இதனிடையே சீனாவின் ஹைனான் மாகாணப்பகுதியில் ஹையன் புயலின் தாக்கத்தின் காரணமாக கனமழை பெய்தது. மேலும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சான்சா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் மாயமாகியுள்ளனர். இவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்