முக்கிய செய்திகள்:
யாசர் அராஃபத், விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது உறுதி - மனைவி பரபரப்புத் தகவல்

பாலஸ்தீன தலைவர் யாசர் அராஃபத், தனது நெருங்கிய தொடர்பு கொண்டவர்களால் விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பதாக, அவரது மனைவி சுஹா தெரிவித்துள்ளார். கொலைக்கான பின்னணியை அறியாமல் விடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாலஸ்தீன தலைவரான யாசர் அராஃபத், கடந்த 2004 ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் பொலோனியம் எனப்படும் கொடிய விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக அவரது மனைவி சுஹா தெரிவித்த பரபரப்புக் குற்றச்சாட்டை அடுத்து, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தடயவியல் நிபுணர், அராஃபத்தின் உடலை தோண்டி எடுத்து சோதனை நடத்தினர். இந்நிலையில், கத்தார் நாட்டில், அல்ஜசீரா தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சுஹா, தனது கணவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருப்பது உறுதியாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். கொலைக்கான பின்னணியை அறியாமல் விடப்போவதில்லை என்றும் சுஹா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்