முக்கிய செய்திகள்:
பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து விழுந்ததில், 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பெஷாவர்: பாகிஸ்தானில் பளிங்குக் கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில், 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் மொஹ்மந்த் ஏஜென்ஸி மாவட்டத்தில் உள்ள ஜியாரத் பகுதியில் சனிக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, அங்குள்ள பளிங்குக் கல் சுரங்கத்தில் கற்களை தொழிலாளர்கள் வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது, இடிந்து விழுந்தது. அதில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன், இரண்டு வாகனங்களும் இடிபாடுகளில் புதைந்தன, இதுவரை, 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், மீட்புப் பணிகளில் மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்