முக்கிய செய்திகள்:
அதிபர் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தல்.
கொழும்பு: வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை இலங்கை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் அனைத்துக் கட்சிகளைûயும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது, இதுகுறித்து கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் எவ்வித அச்சமுமின்றி தங்கள் அதிபரைத் தேர்வு செய்வதற்கு மக்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது, தேர்தலில் ராஜபட்சவுக்கு எதிராக சிறுபான்மை தமிழர்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்கு ராணுவத்தை அரசு ஈடுபடுத்தக் கூடும் என்று எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா வியாழக்கிழமை கூறியநிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள்