முக்கிய செய்திகள்:
பெஷாவர் பள்ளி தாக்குதல், திடுக்கிடும் தகவல்கள்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள ராணுவ பள்ளியில் நடைபெற்ற தாலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து நடைபெற்ற விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன, தாலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 11 பயங்கரவாதிகள் இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதில் 7 பேர் மட்டுமே பள்ளிக்குள் சென்றுள்ளனர். மற்ற 4 பேரும், பள்ளிக்கு வெளியே இருந்து அவர்களுக்கு உதவி செய்துள்ளனர், உள்ளே சென்ற 7 பேரில், ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் சென்று பள்ளியை ரத்தக் காடாக்கினான் மற்ற 6 பேரும், தங்களது கைகளில் இருந்த இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளனர், வெளியே இருந்த 4 பயங்கரவாதிகளும் அன்றைய தினம் முழுவதும் அப்பகுதியிலேயே இருந்து கொண்டு நடக்கும் தாக்குதலையும், ராணுவ நடமாட்டம் முழுவதையும் கண்காணித்து உள்ளே இருந்த பயங்கரவாதிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர் உள்ளே இருந்த பயங்கரவாதிகள் அனைவரும் ராணுவத்தால் கொல்லப்பட்ட நிலையில், வெளியே மறைந்திருந்த 4 பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுள்ளது முதல்கட்ட விசாரணையில் வெளியாகியுள்ளது, இந்த தாக்குதலில் ஏராளமான குழந்தைகள் உட்பட 150 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
மேலும் செய்திகள்