முக்கிய செய்திகள்:
பாகிஸ்தானில் நான்கு பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவ பள்ளிக்குள் நுழைந்த தாலிபான் பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலின் எதிரொலியாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த 4 பயங்கரவாதிகளுக்கு நேற்று தண்டனை நிறேவேற்றப்பட்டது, தூக்கிலிடப்பட்ட நால்வரும், கடந்த 2003ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கொல்ல முயன்ற சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆவர், பெஷாவர் ராணுவப் பள்ளி தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக எப்போதும் போல கண் துடைப்புக்காக நடத்தப்படும் நடவடிக்கை போல் அல்லாமல் உணர்வு ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்