முக்கிய செய்திகள்:
ஏ.ஆர்.ரகுமானுக்கு டாக்டர் பட்டம்

சென்னையை சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக் கல்வி மையமான 'ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து' கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இசைத் துறையில் ரஹ்மானின் சாதனைகளைப் போற்றும் வகையில் அவருக்கு இந்த விருதினை வழங்குவதாக ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து அறிவித்தது.தனது கே.எம். இசைப் பள்ளி மாணவர்களுடன் ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஏ.ஆர். ரஹ்மான், இந்த கவுரவ பட்டத்தை ஏற்றுக் கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் நன்றியுரை ஆற்றிய ஏ.ஆர்.ரஹ்மான், '1845-லிருந்து சர்வதேச அளவில் இசை, நடனம், நடிப்பு என கலைத்துறை கல்வியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து நிறுவனம் அளித்துள்ள இந்த கவுரவ பட்டம் தனக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது' என குறிப்பிட்டார்.

 

மேலும் செய்திகள்