முக்கிய செய்திகள்:
சிங்கப்பூரில், 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக, 24 இந்தியர்கள் கைது

சிங்கப்பூரில் உள்ள 'லிட்டில் இந்தியா கலைப்பகுதி' என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு, பேருந்து ஒன்று மோதியதில் இந்திய இளைஞர் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தைப் பார்த்த இந்தியர்கள், அந்தப் பேருந்தை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்து எரித்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் வன்முறை வெடித்ததில், அருகில் இருந்த பல வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் 10 காவலர்கள் உட்பட 18 பேர் காயம் அடைந்தனர். சிங்கப்பூர் வரலாற்றில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் மற்றும் ஊதியத்தில் மிகப்பெரிய அளவில் வேறுபாடுகள் இருப்பதுதான், இந்த ஆவேசத்திற்குக் காரணம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, பிரதமர் லீ சீன் லூங், சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்