முக்கிய செய்திகள்:
8ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை

சென்னை மணலியில் 8ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் தண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மணலி SRFவித்யாலயா தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பூஜா, இவர் அடுத்த கல்வியாண்டிற்கான பள்ளி கட்டணத்னத செலுத்தாததால் காலை முதல் மாணவியை வகுப்புக்கு வெளியே நிறுத்தி ஆசிரியை தண்டித்ததால் மன முடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

அடுத்த கல்வியாண்டிற்கான பள்ளி கட்டணம் ரூபாய் 16,000 கட்ட வற்புறுத்தி பூஜாவை வகுப்பிற்கு வெளியே நிறுத்தி ஆசிரியர் தண்டித்துள்ளார். மாணவி பூஜாவை காலை முதல் மாலை வரை வகுப்பிற்கு வெளியே நிறுத்தி தண்டனை வழங்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத சமயம் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் மீதும் மாணவியை தண்டித்த ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகள்